கண்களை மறைக்கும்படி தொப்பியை அணிந்திருந்த அவரின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வந்தன.ஐபிஎல் தொடரின் நேற்றைய முக்கிய போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் பெங்களூர் அணி இருந்தது.இருந்த போதிலும் குஜராத் அணி தான் வெற்றி பெற்றது, இதையடுத்து பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி சதமடித்தார். அவரின் சதம் வீணாய் போனது, இந்த தோல்வியை தாங்கி கொள்ள முடியாத கோலி பெவிலியன் அறையில் தொப்பி அணிந்தபடி உட்கார்ந்திருந்தார்.
கண்களை மறைக்கும்படி தொப்பியை அணிந்திருந்த அவரின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வந்தன. இந்த காட்சி ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.