ஐபிஎல் – மேக்ஸ்வெல்லின் மோசமான சாதனையை சமன் செய்த ரோகித்!

0
30

நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றநிலையில், முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

அப்போது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா, ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஓவரில் டக் அவுட் ஆனார் . இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற கிளென் மேக்ஸ்வெல்லின் மோசமான சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இந்த பட்டியலில் மேக்ஸ்வெல் மற்றும் ரோகித் 19 முறை டக் அவுட் ஆகி முதலிடத்தில் உள்ளனர். தினேஷ் கார்த்திக் மற்றும் நரைன் 18 முறையும், பியூஷ் சாவ்லா மற்றும் ரஷீத் கான் 16 முறையும் டக் அவுட் ஆகி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இப்போட்டியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 4வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here