ஐயப்ப பக்தர்களின் மகாசக்தி பூஜை கொட்டகலை ஹரிங்டன் தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இன்று (25) காலை முதல் மாலை வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்த மகாசக்தி பூஜை 18படி விளக்கேற்றல், மஞ்சள் மாதா தேவி பூஜை, கருப்புசாமி பூஜை , திருவிளக்கு பூஜை, அலங்கார பூஜை, ஐயப்ப சுவாமிக்கு சுவாகஸ்ரநாம 1008 நாம அர்ச்சனை , மகர ஜோதி விழா , பஜனை ஆகிய நிகழ்வுகள் இதன்போது சிறப்பாக இடம்பெற்றன.

குறித்த பூஜை நிகழ்வுகளை தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன. குறித்த பூஜை நிகழ்வுகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்



