ஒட்டு மொத்த தோட்டபாதைவலையப்புகளும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரபட வேண்டும் என்கிறார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்
மலையகத்தில் உள்ள அனைத்து ஒட்டுமொத்த பாதை வலையமைப்புகளும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழ் கொண்டுவரபட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் எனது அடுத்த பிரேரனை எனவும் அப்போதுதான் எந்த ஒரு அரசியலிலும் தங்கி இருக்காமல் இயல்பாகவே இந்த வீதிகள் அபிவிருத்தி செய்வதற்கான நீதி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்குமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் காப்பட் வீதிக்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் உறையாற்றி பாராளுமன்ற உறுப்பினர் தோட்ட பாதைகள் அனைத்தும் அபிவிருத்தி செய்யபடாமல் இருப்பதற்க்கு காரணம் அதற்கு உரிமையாளர்கள் இல்லை இவை அனைத்தும் தோட்ட நிருவாகம் கவனிக்கபட வேண்டியது என்ன சொல்லபடுகிறது.
அதனால்தான் பிரதேசசபை சட்டத்தை திருத்துமாறு கோறுகின்றோம் பிரதேசசபை சட்டத்தில் சொல்லபட்டுள்ள வசனம் தோட்ட பாதைகலை தோட்ட நிருவாகம் திருத்தபட வேண்டும் ஆனால் தோட்டநிருவாகம் தோட்டபாதைகலை திருத்தம் செய்யகூடிய நிலையில் இன்று இல்லை தோட்ட மறுத்துவ முறை எமக்கு தேசிய சுகாதார முறைமைக்கு கிழ் இல்லை கடந்த இரண்டரை வருடகாலமாக பாராளுமன்றத்தில் குழு அமைத்து போராடி கடந்த வாரம் அமைச்சரவையிலே பத்திரம் தாக்கல் செய்யபட்டு இருக்கிறது எனவே அனைத்து தோட்டவைத்தியசாலைகளும் அரசாங்க வைத்தியசாலைகளான ஆக்கபடுவதற்க்கு பத்திரம் தாக்கல் செய்யபட்டிருக்கிறது அது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
எப்படி எங்களது தோட்டபாடசாலைகள் அரசபாடசாலைகளாக ஆக்கபட்டிருக்கிறதோ எப்படி எங்களது தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்க வைத்தியசாலை முறைமைக்கு கொண்டுவர பட்டிருக்கின்றதோ அதுபோல் கோஷத்தை முன்வைத்து மக்கள் போராட வேண்டும் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல எந்த ஒரு அரசாங்கத்திடமும் கோறிக்கை வைப்போம் எல்லோரும் போராடுங்கள் போராட சந்தர்ப்பம் கிடைக்கும் போது தோட்ட பாதை வலையமைப்பு அரசாங்கத்தினால் பொறுபேற்க்கபட வேண்டுமென போராடுங்கள் .
நாம் எப்படி C.w.w.கன்னங்கரா அவர்கள் இலவச கல்வியை இந்த நாட்டுக்கு பெற்றுகொடுத்தார் அந்த இலவச கல்வியை பெற்று கொள்லாமல் தோட்டபாடசாலைகளை பெற்றுகொண்டமோ அதன் பின்னால் அரசாங்க பாடசாலைகல் ஆனதற்கு பின்னால் தான் இவை அனைத்தும் பிள்ளைகளுக்கும் இலவச கல்வி கிடைத்திருக்கிறது என தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)