சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப்போட்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 2.30இற்கு ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் முதல் போட்டியில் தோல்வியுற்ற பங்களாதேஷ் அணி, இரண்டாவது போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமப்படுத்தியது.
இந்தநிலையில், இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெறுமாயின், அது இலங்கை மண்ணில் பெறும் முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.