ஒரே இரவில் வெண்மையாக்கும் கரீம்கள்? மக்களுக்கு எச்சரிக்கை

0
235

இணையங்களில் பரவலாக விற்பனை செய்யப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் நூற்றுக்கணக்கான பல்வேறு இணையதளங்களில் கிடைக்கின்றன.

அவ்வாறான பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா போன்ற விடயங்களை ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தோல் மருத்துவர் என்ற ரீதியில் ஒரே இரவில் சருமத்தை அழகாக மாற்றும் எந்தவொரு பொருளையும் தாம் பரிந்துரைக்கவில்லை என தெரிவித்தார்.

எனினும் எவராவது, தனது தோலில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அது படிப்படியாகவும் முறையாகவும் செய்யப்பட வேண்டும் என தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here