முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும், ரணில் விக்ரமசிங்கவும் சிங்கள திரைப்படமொன்றை பார்க்கச் சென்றிருந்த படங்கள் வௌியாகி பேசுபொருளாகியுள்ளன.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறிது நேரம் படத்தை பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து புரப்பட்டுச் சென்றிருந்தார்.
அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படத்தை முழிமையாக பார்த்துவிட்டு படத்தின் இயக்குனரான அசோக ஹந்தகமவுக்கும் வாழ்த்து கூறிவிட்டுச் சென்றுள்ளார்.





