ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்!

0
311

ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக உள்ளதாக வந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிஸ்ஸோரி என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவ வார்டில் 14 செவிலியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த 14 செவிலியர்களும் ஒரே நேரத்தில் கர்ப்பிணிகள் ஆகி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த 14 செவிலியர்களில் கெய்த்லின் ஹால் என்ற பெண்ணிற்கு ஜூன் மூன்றாம் தேதி குழந்தை பிறந்ததாகவும் அடுத்தடுத்து மற்ற செவிலியர்களுக்கும் குழந்தை பிறக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரசவ வார்டில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி உள்ளது அமெரிக்காவில் உள்ள ஊடகங்களில் முன்னணி செய்தி ஆகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here