பன்விலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட தமிழ் மொழிமூல பாடசாலையொன்றுக்கு ஒழுக்கமற்ற ஆசிரியர் என்ற குற்றச்சாட்டின்பேரில் விரட்டியடிக்கப்பட்ட ஒருவரை உன்னகலை தமிழ் பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேற்படி பாடசாலையின் பதில் அதிபராக கடமையாற்றிய ஆசிரியர் வெளிநாடொன்றுக்கு சென்றுவிட்ட நிலையில் இந்த புதிய நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. பன்விலை கல்வி வலயத்தில் பிரதான பாடசாலையில் (அபிராமி ) ஏற்கனவே ஆசிரியராக கடமையாற்றிய இவர் அங்கு ஆசிரியைகளிடம் மற்றும் மாணவிகளிடமும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுப்பட்ட காரணத்தால் அவருக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டு கந்தகட்டி தமிழ்ப்பாடசாலைக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட அதே பாடசாலையிலும் இவரின் ஒழுக்கமற்ற செயற்பாடு காரணமாக மாணவர்கள் பெற்றோர்களால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட அதே நபரை உனனகலை தமிழ்ப்பாடசாலைக்கு பதில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பெற்றோர்கள் உட்பட மாணவர்களும் கல்விச்சமுகமும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மேற்படி நியமனம் தொடர்பில் மத்திய மாகாண கல்வி திணைக்களத்துக்கு பல முறைப்பாடுகளை செய்தபோதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் ஆசிரியைகளிடமும் மாணவிகளிடமும் பாலியல் சில்மிஷம் புரிந்தது உயர்தர மாணவிகளிடம் தொலைபேசியூடாக வன்மமாக உரையாடுவது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் மேற்படி நபரை பதில் அதிபராக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அதிபராக நியமித்திருப்பது கல்வி சமூகத்தையே வியப்புக்குள்ளாகியுள்ளது.




