இந்தியாவின் குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த கப்பலின் என்ஜின் அறையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் .தபார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
ஐ.என்.எஸ் தபாரின் இந்திய கடற்படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக ஹெலிகொப்டர் மற்றும் சிறியரக கப்பல்களும் சென்றன.
இதுதொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்ட செய்தியில், அந்த கப்பலில் 14 மாலுமிகள் இருப்பதாகவும், தீயின் தீவிரம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.