ஓமான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை பெற்றது.
இம்முறை நடைபெறும் உலகக்கிண்ண தொடரில் அணியொன்று (இதுவரையான ஆட்டம்) பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
அணித் தலைவர் தசுன் சானக்க அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றார்.
குசல் மெண்டிஸ் 61 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 60 ஓட்டங்களையும் பெற்றனர்.
கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஓமான் அணிக்கு வெற்றி இலக்காக 226 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




