கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்கு வேலை செய்தவர்களும்,எதிர்கட்சியில் இருக்கும் போது மக்களை குழப்ப வேண்டும் என்பதற்காக மலையக மக்கள் மத்தியில் வந்து ஏதாவது பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர். தற்போது கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது ஓய்வூதிய பணத்தினை கொள்ளையிட்டவர்கள் இப்போது இந்த அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டல்களுக்கமை சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபா செலவில் தலவாக்கலை லோகி தோட்டத்தில் நிர்மானிக்கப்படவுள்ள சிறுவர் பராமறிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் தலைமையில் இன்று காலை (19) நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
மலையகப்பகுதியில் இன்று பல்வேறு அபிவிருத்தி பணிகள் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ததலைமையில் நடைபெற்று வருகின்றன. இன்றும் ஐந்து தோட்டங்களில் ஒரு தோட்டத்திற்கு 120 லட்சம் படி சிறுவர் பராமறிப்பு நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்படுகின்றன. ஆனால் அதனை பார்த்து இன்று பலர் குறை கூறுவதை செய்து வருகின்றனர் கடந்த காலங்களில் கோதுமை மாவின் விலை அதிகரித்து போது கோதுமைமாவை பற்றி பேசினார்கள் இப்போது அதனை விட்டுவிட்டு இப்போது புதியதாக EPF, ETF, பற்றி பேசுகிறார்கள். கடந்த அரசாங்கத்தின் போது தான் தோட்டத்தொழிலாளர்களின் ஓய்வூதிய பணம் சேமலாப நிதியம் போன்றவற்றினை கொள்ளையிட்டது ஆகவே அவர்களின் நோக்கம் மக்களுக்கு எதனையும் செய்யவிட்டாலும் மக்கள் மத்தியில் வந்து ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும் தோட்டத்தொழிலாளர்களை பொருத்த வரையில் சௌமிய மூர்த்தி தொண்டமான் முதல் தொழிலாளர்களுக்கு ஆபத்து வரும் போது அதனை பாரத்துக்கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சும்மா இருக்காது கடந்த காலங்களில் இந்திய அரசாங்கத்தினால் ஐயாயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது அதற்கு அடிப்படி தண்ணீர் மின்சாரம், பாதை ஆகிய அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக சுமார் 500 லட்சம் ரூபா நிதி ஒதுக்கி கொடுத்து அவற்றை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது ஜீவன் தொண்டமான் நினைத்திருந்தால் ஆயிரம் புதிய வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கலாம் யார் கட்டிக்கொடுத்தாலும் அங்கு வாழ்வது நம் மக்கள் நம் மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அவர்களுக்கு எமது சேவைகள் சென்றடைய வேண்டும் இன்று இந்த கட்டத்திற்கு 120 லட்சம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது அதனை ஒரு தோட்டத்திற்கு 20 லட்சம் ரூபா படி ஆறு தோட்டங்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கலாம் நாம் ஒரு போதும் அரசியல் கருதி எதனையும் செய்வதில்லை எமது சேவைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று எண்ணியே செய்து வருகிறோம்.
ஆகவே தான் பதிய மாற்றங்கள் வரும் போது எமது மக்களுக்கும் முழமையாக கிடைக்க வேண்டும் அப்போது தான் ஏனைய சமூகங்கள் போல் எமது மக்களும் சமமாக வாழ முடியும் என்பதற்காகத்தான் இவ்வாறு முழமையான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றோம்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸினை பொருத்த வரையில் கல்விக்கு முக்கியத்துவமளித்து .அன்று முதல் இன்று வரை செயற்பட்டு வந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சத்திவேல்,நகர மற்றும் பிரதேசபை தலைவர்களான லெ.பாரதிதாசன்,ராஜமணி பிரசாத்,கதிர்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மலைவாஞ்ஞன், க.கிஷாந்தன்