கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட ரயில் தடம் புரள்வுகள்

0
127

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட ரயில் தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 109 ரயில் தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண ரயில் பாதைகளில் 50 தடம் புரள்வுகளும் ரயில் நிலையங்களில் 59 தடம் புரள்வுகளும் இடம்பெற்றுள்ளது.

ரயில் தடம் புரள்வுகள் தொடர்பாக துணை ரயில்வே பொது மேலாளர் என். ஜே.இதிபொலகே தெரிவிக்கையில்; புகையிரதப் பாதையின் சட்டவிதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் புகையிரதப் பெட்டிகளில் ஏற்பட்ட குறைபாடுகளே இவ்வாறு தடம் புரள்வுகளுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வருடத்தில் புகையிரத கடவைகளில் வாகனங்கள் மற்றும் புகையிரதங்களுக்கு இடையில் மோதி விபத்துக்குள்ளான 61 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இந்த விபத்துகளில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 62 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 353 பேர் புகையிரதத்தில் அடிபட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அந்த விபத்துகளில் தற்கொலை முயற்சிகள், பாதுகாப்பற்ற ரயில்வேயில் பயணம் செய்தல், செல்போன்களை பயன்படுத்தி ரயில்களில் பயணம் செய்தல் போன்றவை அதிகம் பதிவாகியுள்ளன.

ரயில் பாதையில் விபத்துக்கள் காரணமாக 154 பேர் உயிரிழந்துள்ளதுடன் 203 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here