களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் காணாமல் போன இரண்டு மீனவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரண்டு மீனவர்களில் ஒருவரின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொருவரின் உடல் அருகில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (28) காலை அவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தகத்தை சந்தித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அளுத்கமவைச் சேர்ந்த நதுன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நதுன் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில், அவர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது, அவர்களைத் தேடுவதற்காக உள்ளூர் மக்களால் படகுகள் மூலம் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.