கடவுச்சீட்டு சேவைகளை விரைவுபடுத்துவதற்காக எந்தவொரு தரகர்களுக்கோ அல்லது வெளியாட்களுக்கோ பணம் செலுத்த வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
கடவுச்சீட்டுக்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் அலுவலக காசாளரிடம் மாத்திரமே கொடுக்கப்பட வேண்டும் என்றும், அங்கு அதிகாரப்பூர்வ ரசீது வழங்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சத்துக்கள் உரிய கவுண்டரிலிருந்து மட்டுமே சேகரிக்கப்பட வேண்டும்.
நியாயமான மற்றும் சுமூகமான கடவுச்சீட்டு விண்ணப்ப செயல்முறையை உறுதி செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.