அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரபத்தனை வோல்புறுக் பகுதியில் கட்டட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்த மூவரில் மண்ணில் புதையுண்ட ஒருவர் மரணம் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (04) திகதி பகல் 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பெல்மோரா தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளினது 43 வயது தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந் நபர்கள் மூவரும் கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதறகாக தளம் வெட்டும் போது குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது பிரதேசவாசிகள் இணைந்து மூவரையும் மீட்டுள்ளனர் எனினும் ஒருவர் மாத்திரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இறந்தவரின் சடலம் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே.சுந்தரலிங்கம்