கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்கின. இதில், ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
ஈரான் தாக்குதல்
இந்த நிலையில் வளைகுடா நாடுகள், அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தன. அந்நாடுகளில் அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைக்கப்பட்டன. இதனால், அந்த நாடுகளையும் ஈரான் தாக்கியது.
அதில், கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்றுமதி முனையம் குண்டுவீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன.




