பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் தனது கணவரை ஏலம்விடப் போவதாக அறிவித்துள்ளார்.
அயர்லாந்தை சேர்ந்த லிண்டா மெக்அலிஸ்டர் ( Linda McAlister) என்ற இந்தப்பெண், தனது கணவரை ஏலத்திற்கு விடப்போவதாக விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த விளம்பரத்தை பார்த்த பல பெண்களில் குறித்த பெண்ணின் கணவரை, ஏலத்தில் கொள்வனவு செய்வதற்கு 12 பெண்கள் இணக்கம் தெரிவித்து உள்ளனர்.
லிண்டா விளையாட்டாக இந்த பதிவை செய்திருந்தாலும், இதனை உண்மையென நம்பிய 12 பெண்கள் ஏலத்தில் பங்கேற்று ஜோனை கொள்வனவு செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் லிண்டவும் அவரது கணவரும் இந்த விடயத்தை விளையாட்டாக கருதி சிரித்து மகிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.