கண்டி நகர எல்லை பகுதியில் காசநோய் முக்கிய தொற்று நோயாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதன்படி, கண்டி நகர எல்லைக்குள் சுமார் 50 காசநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாநகர வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கண்டி மாநகர எல்லைக்குள் பிரதான தொற்று நோய் டெங்கு அல்ல காநநோய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்நிலையில், இருமல் மற்றும் சளி, சோம்பல் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக வைத்தியரிடம் சென்று தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
காசநோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்நோய் கண்டறியப்படுவதற்கு ஏறக்குறைய 6 மாதங்கள் ஆகும் என்பதாலும், கண்டி நகரில் தற்போது காசநோய் பரவி வருவதாலும், மக்கள் இயன்றளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வைத்தியர் பசன் ஜயசிங்க கூறுகிறார்.