கண்டி, முல்கம்பளை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, தாய் மற்றும் மகனின் சடலங்களை பொலிஸார், நேற்று முன்தினம் (17) மாலை மீட்டுள்ளனர்.மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த வீ.டீ.லீலாவதி (வயது 69) மற்றும் அவரது மகனான கே.பீ.எஸ்.குகரத்ன (வயது 44) ஆகிய இருவருமே, இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மேற்படி இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சடலங்களுக்கு அருகிலிருந்து கடிதமொன்றை மீட்டுள்ள பொலிஸார், இதுத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.