கிளிநொச்சியில் இருந்து யாத்திரீகர்களுடன் கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று பதியத்தலாவை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து நேற்றிரவு கதிர்கமாத்தை நோக்கி குறித்த பஸ் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இதன்போது இன்று அதிகாலை பதியத்தலாவை கல்லோடை பாலத்துக்கு அருகில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால், பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்தாகவும் கூறப்படுகின்றது.
இதனால் பஸ்ஸில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்த நிலையில் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.