நுவரெலியா பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்ட்ட கந்தப்பளை கொங்கோடியா தோட்டத்தில் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் 80 பேர்சஸ் காணி தொடர்பாக நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலுயோகராஜிற்கு எதிராக பரப்பப்பட்டு வரும் மோசடி குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்பதை ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் 21 உறுப்பினர்கள் இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் நானுஓயா பிரதேச சபை பிரதான காரியாலய கூட்ட மண்டபத்தில் நேற்று (23/06/2022) வியாழக்கிழமை விசேட சபை அமர்வு இடம்பெற்றது.
இதன்போது சபை உறுப்பினர்களுக்கு இந்த காணி தொடர்பில் உண்மை தன்மையை கடித ஆதாரங்களுடன் தவிசாளர் உறுதிப்படுத்தினார்.
அத்துடன் தவிசாளர் சபையில் இக்காணி தொடர்பாக விளக்கமளித்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது கந்தப்பளை கொங்கோடியா தோட்டத்திற்குறிய 80 பர்சஸ் காணியை நுவரெலியா பிரதேச சபையின் அபிவிருத்தி பணிக்காக விடுவித்துக்கொள்ள சகல ஏற்பாடுகளும்முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு செயற்படும் போது உடபுஸல்லாவ பிளான்டேஷன் தோட்ட நிர்வாகத்தில் இக் காணியை 53 வருட குத்தகைக்கு பெற்று அதில் 26 வருட குத்தகை பணம் செலுத்த இருப்பதனால் அத் தொகையை 3236554.73 செலுத்துமாறுஅறிவித்திருந்தது.
நுவரெலியா பிரதேச சபையால் அத்தொகையை செலுத்த உடன்படுவதாக தெரிவிக்கப்பட்டது.அக்காலக்கட்டத்தில் சபையில் பாரிய அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டதால் அக்காலத்தில் திண்ம கழிவு முகாமைத்துவத்திற்காக எடின்பரோ தோட்டத்தில் காணி துண்டொன்று விடுவித்துகொள்ள ரு.2360000.00 நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு செலுத்தப்பட்டது.சபையின் நிதி நிலமை மோசமாக இருந்த வேளையில் கந்தப்பளை கோவில் கமிட்டி அவர்களுக்கு இந்த காணி உரியதென கூறினார்கள்.
சபையால் கோவில் கமிட்டிக்கு குறிப்பிட்ட குத்தகை தொகையை கொங்கோடியா தோட்டத்திற்கு செலுத்துமாறு கூறினோம்.தனிப்பட்ட வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை கொங்கோடியா தோட்டத்திற்கு செலுத்தப்பட்ட பின் தோட்ட அதிகாரி பணம் செலுத்தியவருக்கு இக் காணியை தோட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.
கோயில் கமிட்டி காணி சீர்த்திருத்தும் ஆணைக்குழு அவர்களுக்கு இக்காணி உரியதென கூறியதால் சபையில் இக்காணிக்கான எவ்வித கட்டணமும் செலுத்தாத காரணத்தினால் இக்காணியை சபைக்கு பொறுப்பேற்கும் நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிடப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையால் சபை ஊடாக கொங்கோடியா தோட்டத்திற்கு 26 வருட குத்தகை பணத்தை (3236554.73) குறிப்பிட்ட தோட்டத்திற்கு செலுத்தி சபை பொறுப்பேற்க நடவடிக்கை மேற்கொள்வது சிறந்ததென மும்மொழிகின்றேன்.
நான் இக்காணியை தனிப்பட்ட முறையில் விற்று விட்டதாக தமது ஊடகத்தை மேம்படுத்தி கொள்ளும் நோக்கில் எனது வளர்ச்சிக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்களில் சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட குழுவால் செய்திகள் பரப்பி வருகின்றார்கள்.
நான் இக்காணியை விற்று ஏதாவது ஒரு தொகையை அல்லது வேறு வழியில் பணத்தை பெறவில்லை என்பதை உறுதியாக கூறுகின்றேன்.யாருக்காவது இது சம்பந்தமாக சந்தேகம் இருப்பின் சட்டபூர்வமாக அதனை நிரூபிக்குமாறு அறிவிக்கின்றேன்.ஊடகங்களில் இவ்வாறான பொய்யான செய்திகளை பரப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நுவரெலியா பிரதேச சபை முன்மாதிரியான சபையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் எனது வளர்ச்சியை மற்றும் எதிர்கால அரசியல் பயணத்தை தடுப்பதற்காக என்னுடன் மனஸ்தாபத்தில் இருக்கும் ஒரு குழுவினரால் இவ்வாறான பொய்யான வதந்திகளை பிரச்சாரம் செய்கின்றார்கள்.சபையில் சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவும் விதிமுறைகளை பின்பற்றி நடைமுறைப்படுத்தும் சகல நடவடிக்கைகளிலும் முறைக்கேடுகள் நடைபெறுகின்றதென கூறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் சேவையை முன்னெடுப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தொடர்ந்தும் மக்கள் சேவையை முன்னெடுப்பேன். என உரையாற்றினார்.
மேலும் சபை கூட்டத்தின் பின் நான் எக்காரணத்தை கொண்டும் எனது தாய்க்கட்சியான இ.தொ.காவிலிருந்து ஒருகாலமும் விலக போவதில்லையென ஊடகவியலாளர் கேள்விகளுக்கு பதிலளித்த தவிசாளர் தான் இ.தொ.காவின் உபதலைவர் பதவியிலிருந்து விலககொண்டதை தேசிய சபைக்கு அறிவித்து அதனை மீள் பரிசீலனை செய்வதற்கு கோரவிருப்பதாக சபை நடவடிக்கைக்கு பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நீலமேகம் பிரசாந்த்