நுவரெலியா, கந்தப்பளை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதற்கட்ட கொரோனா சினோபோர்ம் தடுப்பூசிகள், இன்று (11) காலை முதல் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்த தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள், மஹிந்த வித்தியாலயத்தில் நுவரெலியா பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் வைத்தியர்களினால் முன்னெடுக்கப்படுகிறது.
கடும் காற்று, மழையினையும் பொருட்படுத்தாது இப்பிரதேச தோட்டப்பகுதிகள் மற்றும் கிராமப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.
இதன்போது நுவரெலியா, கந்தப்பளை பிரதேச ஊடகவியலாளர்களுக்கு இரண்டாம் கட்ட டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
டி.சந்ரு