கந்தப்பளை வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நூற்றுக்கு அதிகமான பசளை மூட்டைகள் பதுக்கிவைப்பு

0
199

கந்தப்பளை – பார்க் தோட்டத்துக்கு செல்லும் வழியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் உள்ள களஞ்சியசாலையில், நூற்றுக்கு அதிகமான பசளை மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

வீட்டு உரிமையாளர் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, குறித்த வீட்டின் களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அசேதன பசளையை அரசாங்கம் நிறுத்தியுள்ள நிலையில் மரக்கறி பயிர்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அரசாங்கத்தின் கவனத்துக்கு வெளிக்காட்டி நுவரெலியா – கந்தப்பளை பிரதேச விவசாயிகள் ஒன்றிணைந்து, எதிர்ப்பு போராட்டம் ஒன்றை, கந்தப்பளை மஹிந்த வித்தியாலயத்துக்கு முன்பாக, கடந்த (30) காலை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here