தொழிலாளர் தேசிய சங்கத்தின் புஸ்ஸல்லாவ பிரதேச அமைப்பாளர்களில் ஒருவரும் கொத்மலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான சின்னையா கனகசபையின் திடீர் மறைவானது தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தாருக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.