கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்: வெளிவரும் மகிழ்ச்சியான தகவல்கள்

0
106

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பள அதிகரிப்பானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கனடாவில் மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் 16.55 டொலர் சம்பளம் 17.20 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.அத்தோடு, அந்நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில் 3.9 வீதமாக சம்பளங்கள் உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல்களை ஒன்றாரியோ மாகாண தொழில், குடிவரவு, பயிற்சி அமைச்சர் டேவிட் பிக்கினிவெளியிட்டுள்ளார்.அதன் அடிப்படையில், வாரமொன்றுக்கு 40 மணித்தியாலங்கள் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் 1355 டொலர்கள் வரையில் சம்பளம் பெறமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here