கனடாவில் அண்மைக்காலங்களாக வீடுகள் மற்றும் வாடகை வீடுகளுக்கான விலைகள் அதிகரித்தமையினால் அந்நாட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில், கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது.
அவ்வகையில், கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அநேக பகுதிகளில் வீடுகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.கனடாவின் பிரதான வீட்டுச் சந்தைகள் குறித்த தகவல்களின் அடிப்படையில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கிட்சனர்-வோட்டர்லூவில் குறிப்பிடத்தக்களவு விலை குறைப்பு பதிவாகியுள்ளது.அத்துடன், ரொறன்ரோ பிராந்தியத்திலும் வீடுகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக சூகாசா வீட்டு மனை நிறுவனம் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது கிட்சனர் வாட்டலூவில் வீடுகளின் விலைகள் 8.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளமை குற்ப்பிடத்தக்கதாகும்.