பதுளை பூநாகல, கபரகலயில் பகுதியில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் குறித்த வீடமைப்புப் பணிகளை கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அண்மையில் (01) கபரகல பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்த திட்டம் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
இச்சுற்றுப்பயணத்தில் மாவட்ட செயலாளர் சஜித நாமல் ஹேரத், பயிற்சி நிருவாக சேவை உத்தியோகத்தர் குழுவின் (2025) உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.