தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தற்போது கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அட்கல பொலிஸார் எமக்கு தெரிவித்தனர்
கம்பளையில் பிரபல பாடசாலையொன்றில் மாணவர் ஒருவர் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.ஜப்பானில் நடைபெறவுள்ள சர்வதேச ஜூடோ போட்டிக்காக செல்லவிருந்த கம்பளை பிரதேசத்தில் காணப்படும் பிரபல பாடசாலையொன்றில் மாணவர் ஒருவர் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
போட்டி இம்மாதம் 22ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தற்போது கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அட்கல பொலிஸார் எமக்கு தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் 10ஆம் ஆண்டுக்கான நான்கு வகுப்புக்கள் உள்ள நிலையில் அதில் ஒரு தொகுதி மாணவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஒருவன் செய்திபிரிவு வினவின போது, அட்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் செனரத் கெகுலந்தர,மாணவர்களுக்கும் சர்வதேச போட்டிகளுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான சம்பவம் குறித்து பெற்றோர் கூறுகையில்,
குறித்த பாடசாலையில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது. இதனால் தான் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டுள்ளனர்.