கம்பஹா நகரிலுள்ள பிரசித்திபெற்ற தனியார் வகுப்பொன்றில் பெண்கள் கழிப்பறையில் நவீன கெமரா பொறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில், பொலிஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சம்பஹா உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளாா்.
குறித்த நிறுவனத்தின் மேலதிக வகுப்பில் பங்குபற்றிய மாணவிகள் சிலர் இந்த கெமரா தொடர்பில் அறிவித்ததன் பின்னர் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளா்ா.
குறித்த கெமராவில் பதிவாகும் காட்சிகள் கையடக்க தொலைபேசி அல்லது மடிக்கணினி என்வற்றினூடாக பார்வையிடும் வகையில் பொறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த தனியாா் வகுப்பு உரிமையாளர் மறறும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் அதிகமானவர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
மேலும், குறித்த கெமராவை பொறுத்திய நபரை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.