நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும், வரும் ஜூலை 10-ம் தேதி, சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாப்பிள்ளை மனு ரஞ்சித், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப வாரிசும் ஆவார். அவர் கருணாநிதிக்குக் கொள்ளுப் பேரன் முறையாகிறார்.
அதாவது கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழியின் மகன் தான் மனு ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.