நாடாளாவிய ரீதியில் அறிவிப்பு துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டு இலங்கையில் பல பாகங்களுக்கும் சென்று அறிவிப்பு துறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட அக்கரப்பத்தனை அல்டோரி தோட்டத்தை சேர்ந்த ராமன் கேதீஸ்வரனுக்கு 30 வருட கலை பயணத்தை கௌரவிக்கும் நோக்கத்தில் புதிய கலை வட்டத்தினால் ‘கலாமித்ரா’ எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1989 ஆண்டு முதல் – 2022 வரை 30 வருடங்களுக்கு மேல் கலைத்துறை.ஊடகத்துறை. சமூகப்பணி என்பவற்றிலும்.கடந்த 20 வருட காலமாக புதிய அலை கலை வட்ட நுவரெலியா மாவட்ட கிளை தலைவராகவும் செயற்பட்டமைக்காக 30.01.2022 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கதிரேசன் மணி மண்டபத்தில் புதிய அலை கலை வட்டத்தின் ஸ்தாபகர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதாமேத்தா தலைமையில் இராமன் கேதீஸ்வரனுக்கு ” கலாமித்ரா ” எனும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்