லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்கந்த வத்தை தோட்டத்தில் வீடொன்றில் கூரை வழியாக உட்புகுந்து வீட்டிலிருந்த தொலைக்காட்சி ,மற்றும் கிரேன்டர், உள்ளிட்ட பொருட்கள் (21) அன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பதுளை லுனுகளை பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயது மதிக்கத்தக்க நபர் உள்ளிட்ட மேலும் இருவரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் (23) பேரில் கைது செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிசார் தெரிவித்தனர்.
டி.சந்ரு