கல்கிசை நீதிமன்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரி இடமாற்றம்

0
69

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி கல்கிசை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இன்று (14) முதல் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்துள்ளார்.

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியை பிணையில் விடுவிக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் நேற்று (13) உத்தரவிட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை (10) கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிக்கும் மற்றும் பொலிஸ் அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது பொலிஸ் அதிகாரி சட்டத்தரணியை தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here