இந்தியா – ஒடிசாவின் கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து மரணமான சம்பவம் அங்கு பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.
கல்லூரியின் பேராசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நிலையிலேயே அவர் இந்த முடிவை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த பேராசிரியருக்கு எதிராக அவர் வழங்கிய முறைப்பாட்டைக் கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனையடுத்தே, அவர் தீக்குளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஒடிசாவின் எதிர்க்கட்சிகள் நீதி விசாரணை கோரி போராட்டங்களை அறிவித்துள்ளன.