வே.இராதாகிருஸ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சர்¸ மலையக மக்கள் முன்னணி தலைவர்¸ தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதி தலைவர்
மலர்ந்த 2018 தமிழ் சிங்கள புதுவருடத்தில் நாட்டில் நல்லினக்கமும் இனங்களிடையே ஒற்றுமை புரிந்துணர்வு கொண்டதாகவும் சிங்களவர் தமிழர் முஸ்லிம் கிருஸ்த்தவர்கள் அனைவரும் இணைந்நு ஒற்றுமையாக வாழும் நிலை மேலோங்கும் புதுவருடமாக இருக்க வேண்டும் என தனது தமிழ் சிங்கள புதுவருட வாழத்து செய்தியில் கூறியுள்ளார் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணி தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்
தொடர்ந்து அவரது வாழ்த்த செய்தியில்
இந்த நாட்டின் மக்கள் ஒற்றுமையாக எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி வாழ விரும்புகின்றவர்கள். இவர்கள் இவர்களின் வாழ்வியலில் வரும் சமய விழாக்கள் சமய சடங்குகள் பெருநாள்கள் அனைத்தயும் கொண்டாடி இன்புரும் வேலையில் ஏனைய சமயத்தவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும். அவ்வாறு செய்யும் சந்தர்பத்திலேயே மதங்களினதும் இனங்களினதும் கலாச்சாரங்களiயும் பண்பாடுகளையும் புறிந்துக் கொள்ள முடியும்.
அதேவேலை அதற்கு மதிப்பளிக்கவும் முடியும். இவை தொடரும் சந்தர்பத்தில் இன ஒற்றுமை ஏற்படும். இதை புரிந்து அனைவரும் செயற்பட வேண்டும். இதற்கு சிறந்த உதாரணமாக பிறந்திருக்கும் தழிழ் சிங்கள புண்தான்டு காணப்படுகின்றது. இது தமிழ் சிங்கள இன ஒற்றுமையையும் காட்டுகின்றது. இதை வழுபடுத்த வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
நாட்டு மக்களின் ஒற்றுமையை இவ்வாறான கொண்டாட்டங்களிலேயே மேன்மைபடுத்த முடியும். இவை தற்போது பாடசாலை மட்டங்களிலும் ஆரம்பிக்கபட்டு இருக்கின்றது. மாணவர்களிடம் இருந்து இவைகள் அரம்பிக்கபட வேண்டும் அதனாலயே கல்வி அமைச்சு அனைத்து சமயசார் விடயங்களையும் பாடசாலைகளில் ஒரு தேசிய நிகழ்வாக கொண்டாடி வருகின்றது.
இந்த நாடு அபிவிருத்தி அடைந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால் இனங்களிடையே ஒற்றுமை அவசியம். அதற்கு இவ்வாறாள விழாக்களை இனமத பேதமின்றி அனைவரும் கொண்டாட வேண்டும். அதன் ஊடாக இந்த நாட்டில் சாந்தி சமாதானம் ஏற்படும். இவை பிறந்திருக்கும் புதுவருடத்தில் ஈடேர வேண்டும் அதற்கு எல்லோருக்கும் பொதுவான இறைவன் அருள்பாழிக்க வேண்டும் அதற்கு நானும் பிராத்திக்கின்றேன் என்று தனது வாழத்து செய்தியில் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.
பா.திருஞானம்