கல்வித்துறையில் வருகிறது மாற்றம் : வெளியானது அறிவிப்பு

0
87

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை 12 ஆம் மற்றும் 13 ஆம் வகுப்புக்களுக்கும் தற்போது 11ஆம் வகுப்பில் நடைபெறும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையை 10 ஆம் வகுப்புக்கும் மாற்றுவதற்கு உத்தேசித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கை தொடர்பாக அவர் அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், இன்றைய குழந்தைகளின் அறிவாற்றல் திறன்கள் மற்றும் அவர்களின் விரைவான கற்றல் திறனை அங்கீகரிக்கும் வகையில் கல்விசார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தரம் ஒன்றிற்கு முன்னர் “முந்தைய தர” திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.மேலும் கல்வித்துறையை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, சிறந்த நிர்வாகத்தையும் மேற்பார்வையையும் எளிதாக்கும் வகையில், வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை சுமார் 100 இல் இருந்து 120 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here