கழிவு பொருட்களை முகாமைத்துவ செய்தல் என்பது இன்று உலகம் முழுவதும் உள்ள பிரச்சினை அந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது இன்று உலகின் பல நாடுகள் திண்டாடுகின்றனர்.
அந்த வகையில் கழிவு பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அதனை கொண்டு என்னென்ன பொருட்கள் செய்யலாம் இதன் மூலம் சுற்றாடலை எவ்வாறு பாதுகாத்து கழிவு பொருட்களை முகாமைத்துவ படுத்துவது தொடர்பாக மாணவர்களுக்கு பாலர் வயது முதல் முன்னெடுத்துவருகிறது ஹட்டன் ரெஹபொத் பாலர் பாடசாலை ரெஹபொத் பாலர் பாடசாலையின் 10 வருட பூர்த்தியினை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த பாலர்களின் கௌரவிப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் அப்பாடசாலையில் ரேனுகாதேவி தலைமையில் இன்று 06 ம் திகதி காலை ஹட்டனில் நடைபெற்றது.
இதில் எம்மால் சுற்றாடலில் தூக்கி எரியப்படும் பொருட்களை கொண்டு கண்ணைக்கவரும் புத்தாக்கங்கள் உருவாக்கும் திறனை சிறிய வயது முதல் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் வகையிலும் மாணவர்கள் அந்த கழிவு பொருட்களின் பயன்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக தெளிவினையூட்டும் வகையில் ஆக்கங்கள் உருவாக்கப்பட்டு அந்த ஆக்கங்கள்; தொடர்பாக மூன்று மொழிகளிலும் பாலர்களினால் விளக்கமளிக்கப்பட்டன.
வருடம் தோறும் பாலர் பாடசாலைகளில் ஆடல் பாடல் என்ற சம்பிரதாயத்திலிருந்து விலகி மாணவர்கள் எவ்வாறு பயனுள்ள பிரஜைகளாக உருவாக்குவது என்ற எண்ணக்கருவினை அடிப்படையாக கொண்டு குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
குறித்த பாடசாலை கடந்த 10 ஆண்டு காலமாக சமய விழாக்கள் விளிப்புணர்வு ஊர்வலங்கள்,சிரமதான பணிகள்,சமூகநல வேலைத்திட்டங்கள் மருத்துவ முகாம்கள் அன்னதான வேலைத்தி;;ட்டங்கள் சத்துணவு திட்டங்கள் என மாணவர்கள் சிறிய வயது முதல் பழகிக்கொள்ளும் வகையில் முன்னெடுத்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு ஹட்டன் கல்வி வலயத்தின் முன்னாள் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் உட்பட வண பிதாக்கள் அதிபர்கள் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்.