கழிவு பொருட்களை கொண்டு அலங்கார பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் செய்யும் தரம் நான்கு மாணவன்!!

0
821

கழிவு பொருட்களை முகாமைத்துவ படுத்தி அலங்கார பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் செய்யும் தரம் நான்கு மாணவன்.

கழிவுபொருட்கள் முகாமைத்துவம் என்பது எமது நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும் ஒரு விடயமாகவே நாளாந்தம் காணப்பட்டு வருகின்றது.
பொது மக்கள் பயன்பாட்டின் பின் வீசி எறியப்படும் கழிவு பொருட்கள் காரணமாக நாளாந்தம் பல்வேறு சூழல் பிரச்சினைகள் தோற்றுவிக்கின்றன.

இந்த கழிவு பொருட்கள் ஓரளவாவுது முகாமைத்துவம் படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என்பதனை தங்கலை தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட தங்கலை இலக்கம் ஒன்று தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி பயிலும் சந்திரமோகன் திவாகரன் முழு நாட்டுக்கும் எடுத்து காட்டியுள்ளான்.

குறித்த மாணவன் தமது சுற்றுப்புற சூழலில் வீசி எறியப்படும் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி அழகிய மின் விளக்குகளையும் மின்சாரம் இல்லாத போது பயன்படுத்துவதற்கு மின் விளக்கு மின் ஒளிப்பந்தம் விளையாட்டு உபகரணங்கள் போன்றன வற்;றை உருவாக்கி புதிய சிந்தனையினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளான்

இவ்வாறான சிந்தனைகள் வளர்வதன் மூலம் மாணவர்கள் மத்தியில் கழிவு பொருட்களின் மூலம் பல்வேறு பயன்களை பெற முடியும் என்ற எண்ணம் தோன்றக்கூடும் இதனால் புத்தாக்கங்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக தங்கலை தமிழ் மாகா வித்தியாலயத்தின் அதிபர் ஐ.ஜே.ஏ.பிரதீப்குமார் தெரிவித்த அவர் இவ்வாறான சிந்தனை உடைய மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல பல ஆக்கங்கள் உருவாகி அவை சமூக பயன்பாட்டிற்கு உருதுனையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here