முக அழகில் கவனம் செலுத்தும் பல பேர் கழுத்து பகுதிகளில் ஏற்படும் கருமையைக் கண்டுகொள்வதில்லை. நாளடைவில் அது பெரும் பிரச்சினையாக உருவாகிறது.
முகம் வேறு நிறத்திலும், கழுத்து வேறு நிறத்திலும் காணப்படுவது முகத்தின் அழகை கெடுப்பதாக உள்ளது.எனவே இதற்காக ஸ்க்ரப் செய்வது தற்காலிக தீர்வையே தருகின்றது.
கருமை ஏற்படுவதற்கான காரணம்
இந்த கருமை மூக்கு, கண், முழங்கை, முழங்கால், கழுத்து போன்ற இடங்களில் ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உண்டு.சில ஹோர்மோன் பிரச்சினைகளாலும் இந்த பிரச்சினை ஏற்படலாம்.
எனவே இந்த பிரச்சினைக்கு வீட்டில் காணப்படும் இயற்கை பொருட்களை கொண்டே நிரந்தர தீர்வு காண முடியும்.
நிரந்தர தீர்வு
கற்றாழை ஜெல், சர்க்கரை, பால் போன்ற பொருட்களை வைத்து இந்த பிரச்சினையை தீர்க்கலாம்.
கற்றாழையை எடுத்து சுத்தம் செய்து பால் சேர்த்து கழுத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.10 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதை தினமும் செய்து வர கழுத்தில் உள்ள கருமை சீக்கிரமாக நீங்கி விடும்.