கவரவில தோட்டத்தில் மண்சரிவு – 8 குடும்பங்கள் இடம்பெயர்வு!!

0
153

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கவரவில தோட்டம் லோவ்கூர்டன் பிரிவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடுகள் இரண்டு பகுதியளவில் சேதமாகியுள்ளது. 23.05.2018 அன்று புதன்கிழமை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இதில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களும், அத்தொடர் குடியிருப்பில் உள்ள ஏனைய ஆறு குடும்பங்களை சேர்ந்தவர்களும், மொத்தமாக 8 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் தோட்ட வைத்தியசாலையில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய தோற்றம் காணப்படுவதால் இப்பகுதியில் காணப்படும் ஏனைய குடியிருப்பாளர்களையும் அவதானத்தோடு இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

DSC06010 DSC06013

மண்மேடு சரிந்து பாதிக்கப்பட்டுள்ள வீடுகளின் உடமைகள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சலுகைகளை பகுதி கிராமசேவர் ஊடாகவும், தோட்ட நிர்வாகத்தினூடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here