காசல்ரீ நீர்தேக்க கரையோரத்தில் ஆணின் சடலமொன்றை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர்நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி தோட்டத்திற்கருகிலே 23.06.2018 மாலை 3 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்தேக்கத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டவர்களை சடலத்தை கண்டு நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் அட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்டப்பின் பிரேத பரிசோணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்