காசல்ரீ நீர் தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு.
ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 31.01.2018 புதன் கிழமை காலை 08.30 மணியளவில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
குறித்த பெண்ணின் சடலம் காசல்ரீ நீர்தேக்கத்தின் பாதுகாப்பு வலயத்திற்கு அன்மித்த பகுதியிலேயே இந்த பெண்ணின் சடலம் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடந்த வாரம் காசல்ரீ லெதன்டி தோட்டபகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ள தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் காசல்ரீ நீர் தேக்கத்தில் உள்ள பாதுகாவலரிடம் இந்த பகுதியில் குறித்த பெண் ஒருவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த பெண்ணின் உறவினர்கள் கேட்டறிந்துள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்தசடலம் 28வயதுடைய பேபிமரினா ஒருபிள்ளையின் தாய்யென அமையாளம் கானபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர் இது கொலையா அல்லது தற்கொலையா என்பதினை அறிந்து கொள்வதற்காக மரணவிசாரனைகளுக்காக சடலம் வைக்கபட்டிருக்கின்ற இடத்திற்கு ஹட்டன் நீதவான் வரவழைக்கபட உள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக குறித்த பெண்ணின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர்: எஸ்.சதீஸ்