நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து பல பகுதிகளில் உள்ள காடுகளுக்கு கடந்த காலங்களில் விசமிகளால் தீ வைக்கப்பட்டன.
இதன் காரணமாக பெருமளவான காட்டு வளங்கள் அழிக்கப்பட்டன.
குறித்த தீ வைப்பின் காரணமாக நீர் நிலையகள் அற்றுப்போய் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக காட்டில் உள்ள விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுகளை தேடி மக்கள் வாழும் குடியிருப்புக்களை நோக்கி வர ஆரம்பித்துள்ளன.
ஹட்டனை அண்டிய காட்டுப்பகுதிக்கு தீ வைத்ததன் காரணமாகவும் தொடர்ச்சியாக விலவி வரும் வரட்சியின் காரணமாக காட்டில் வாழும் குரங்குகள் தற்போது ஹட்டன் நகர் பகுதியினை அண்மித்த தும்புறுகிரிய,ஆரியகம,இந்துமாசபை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு குரங்குகள் கூட்டம் கூட்டமாக உணவு தேடி வர ஆரம்பித்துள்ளன.
இதனால் வீட்டுத்தோட்டங்களில் உள்ள பலவகைகள்,வாழை உள்ளிட்டவைகளை இந்த குரங்குகள் சேதமாக்க ஆரம்பித்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதே நேரம் குரங்குகள் மின்இணைப்பு வயர்கள் மற்றும் தொலைகாட்சி இணைப்பு வயர்கள் உள்ளிட்டவைகளையும் இவை சேதப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே பொறுப்புவாய்ந்தவர்கள் இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்