காரசாரமாக உணவு சாப்பிட வேண்டும் என பலர் விரும்பும் நிலையில் அதிக காரம் சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன தீமை ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல்களை தற்போது பார்ப்போம்அதிக காரம் சாப்பிட்டால் வயிற்று எரிச்சல், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வயிற்று வலி, வாய்வு, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். அதிக காரம் வயிற்று புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
வாயில் புண்கள், நாக்கு எரிச்சல், வாய்ப்புண் போன்றவை ஏற்படலாம். மேலும் தொண்டை எரிச்சல், கரகரப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.
அதிக காரம் சாப்பிடுவது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக மூக்கில் எரிச்சல், தும்மல், மூக்கடைப்பு போன்றவை ஏற்படலாம்.
அதிக காரம் சாப்பிடுவது தூக்கமின்மை, பதட்டம், தலைவலி போன்றவற்றிற்கு வழிவகுக்கும். அதிக காரம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை உயர்த்தும். கர்ப்பிணிப் பெண்கள் அதிக காரம் சாப்பிடுவது கர்ப்பகால நீரிழிவு மற்றும் முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும்.