நுவரெலியா ஹைபொரஸ்ட் தோட்டத்தில் ஏற்பட்ட கடும் காற்றினால் ஹைபொரஸ்ட் முதலாம் பிரிவு தோட்டத்தில் காளி கோவிலில் காணப்பட்ட 200 வருட பழமையான உதிய மரமொன்று வேரோடு சரிந்து மின்சார கம்பியில் விழுந்ததினால் குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
06/07/2022 அதிகாலை ஏற்பட்ட கடும் காற்றிலேயே இம் மரம் வேரோடு சரிந்து மின்சார கம்பியில் விழுந்துள்ளது.இதனால் ஊர் முழுவதிலும் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திற்கும் நுவரெலியா மின்சார சபைக்கும் குறித்த தோட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் பாரியளவில் எவ்வித பாதிப்பில்லையென தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீலமேகம் பிரசாந்த்