நாவலபிட்டி வெருலபதன பிரதேசத்தில் காட்டுப்பன்றிக்கு விரித்த வலையில் சிக்குண்டு சிறுத்தை புலி ஒன்று உயிர் இழந்த சம்பவம் ஒன்று 26.09.2018 புதன் கிழமை மாலை இடம் பெற்றுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்பிரதான வீதிக்கு அருகாமையில் தேயிலை மலைக்கு அடியில் வைக்கபட்டிருந்த வலையில் குறித்த சிறுத்தை புலி சிக்குண்டு உயிர்இழந்துள்ளதாகவும் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்க்கு சென்ற நாவலபிட்டி பொலிஸார் சிறுத்தை புலியின் சடலத்தை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இரண்டு வயது மதிக்கதக்க இந்த சிறுத்தை புலி ஐந்து அடி நிளம் கொண்டதாகவும் தெரிவிக்கபடுகிறது குறித்த சிறுத்தை புலியின் சடலத்தை மீட்ட நாலபிட்டி பொலிஸார் உடவலவ வனவிளங்கு காரியாளய அதிகாரிகளுக்கு ஒப்படைக்கபட்டுள்ளதாகவும் ஒப்படைக்கபட்ட சிறுத்தை புலியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக உடவல கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லபட்டதாகவும் நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மற்றும் உடவலவ வனவிலங்கு காரியால அதிகாரிகள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)