காற்று மாசுபாட்டால் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பு!

0
6

காற்று மாசுபாட்டால் உலகளவில் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார கல்வி பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தூசி உள்ளிட்டவை நுரையீரலைச் சென்றடையும் போது அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கடந்த காலங்களில், புகை பிடிப்பவர்களுக்கு மாத்திரம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்த போதிலும் தற்போது அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக இந்தியாவில், நுரையீரல் பாதிப்படைந்த பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தளவிற்குக் காற்று மாசடைந்து வருவதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here