காலஞ்சென்ற மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் மக்கள் சேவைக் கட்சியின் தலைவருமான சோமவங்ச அமரசிங்கவின் இறுதிக் கிரியைகள் நாளை (18) பிற்பகல் 5.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் உயிருடன் இருக்கும்போது கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவரது இறுதிக் கிரியைகள் மிகவும் சாதாரணமான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.