போராட்டக்காரர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ள அடக்குமுறைகளுக்கு மத்தியில் காலி முகத்திடல் போராட்டக் களம் பல்வேறு அரசியல் கட்சிகளின் கூடாரமாக மாறும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் அனைத்து தரப்பு போராட்டக்காரர்கள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா போராட்டத்திற்கு தினமொன்றை வழங்கியுள்ளமை அரசாங்கத்தின் சதித்திட்டத்தின் மற்றொரு பகுதியாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இது போராட்டக்காரர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே அரசாங்கம் மற்றும் அதன் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




